» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி நகைக்கடைகளில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு !

ஞாயிறு 2, ஆகஸ்ட் 2020 12:24:21 PM (IST)

ஆடிப்பெருக்கு நாளான இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் தூத்துக்குடி நகைக்கடைகளில் ரூ. 100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். பொதுவாக அட்சயதிருதியை, மற்றும் ஆடிப்பெருக்கு அன்று தங்கம், வெள்ளி ஆகியவற்றை பொதுமக்கள் வாங்குவார்கள். அன்றைய தினங்களில் நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். மேலும் அன்றையதினம் தூத்துக்குடியிலுள்ள நகைகடைகளில் சுமார் ரூ. 100 கோடி அளவு வியாபாரம் நடைபெறும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமலில் உள்ளது.

அதிலும் ஆடிப்பெருக்கு முழு ஊரடங்கு நாளான இன்று (ஆக. 2) வந்ததால் மொத்த கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடிப்பெருக்கு அன்று பொதுமக்கள் தங்கம், வெள்ளி வாங்க இயலாத சூழல் அமைந்து விட்டது. மேலும் வியாபாரம் அதிகம் நடைபெறும் நாட்களான அட்சயதிருதியை, மற்றும் ஆடிப்பெருக்கு ஆகிய தினங்களின் போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வியாபாரம் இன்றி நகைகடை வியாபாரிகள்  கவலை அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து

வடிவேலுAug 3, 2020 - 12:23:00 PM | Posted IP 108.1*****

விலை கூட்டி விற்றால் பாதிப்பு தான் வரும் ...

T.PioAug 3, 2020 - 08:09:02 AM | Posted IP 108.1*****

nagai irukura vilaila evan boss vanguvaan

premAug 2, 2020 - 08:43:17 PM | Posted IP 108.1*****

very good

KannanAug 2, 2020 - 07:09:41 PM | Posted IP 108.1*****

Super bro

KalairajanAug 2, 2020 - 01:46:16 PM | Posted IP 162.1*****

அவ்வளவு பணமும் கணவன்மார்கள்களுக்கு மிச்சம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory