» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆடி பெருக்கு விழாவிற்கு தடை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் வெறிச்சோடியது

ஞாயிறு 2, ஆகஸ்ட் 2020 1:20:50 PM (IST)

கரோனா பொது முடக்கம் காரணமாக, ஆடி பெருக்கு விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் களையிழந்து காணப்பட்டது.

விவசாயத்தை வளம் கொழிக்க செய்யும் காவிரி அன்னைக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்தில் ஆடிப்பெருக்கு விழா காவிரிக்கரையோர மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.கடந்தாண்டு ஆடிப்பெருக்கு விழாவின்போது காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. ஆனால் நிகழாண்டில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டும் கரோனா பொது முடக்கம் காரணமாக ஆடிப்பெருக்கு விழா கேள்விக்குறியாகியுள்ளது.

பொதுமுடக்கம் காரணமாக  இந்த வருடம் ஸ்ரீரங்கம்  அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, வடக்குவாசல் படித்துறை , தில்லைநாயகம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை ,கீதாபுரம் படித்துறை மற்றும் ஓடத்துறை படித்துறை ஆகியவை மூடப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்கள் புதுமணத் தம்பதிகள் யாரும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட நீர்நிலைகளுக்கு வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட கூடிய திருச்சி காவிரி ஆறு படித்துறை மற்றும் நீர்நிலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory