» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கரோனா உறுதி

ஞாயிறு 2, ஆகஸ்ட் 2020 8:59:58 PM (IST)

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை 11 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சற்றுமுன்னர் ராஜ்பவன் திரும்பினார். இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பின், ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய நிலையில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு கரோனா தொற்றை உறுதி செய்துள்ளது.  முன்னதாக கடந்த வாரம், ராஜ் பவனில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 84 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஒரு தடுப்பு நடவடிக்கையாக, ஆளுநர் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ஜூலை 29 முதல் ராஜ் பவனில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory