» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவசாயிகளின் தங்கநகை கடன்களுக்கு வட்டி குறைப்பு : இந்தியன் வங்கி அறிவிப்பு

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 10:27:11 AM (IST)

விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியன் வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தியன் வங்கியில் விவசாய நோக்கத்துக்கான தங்கநகை கடன்கள் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், ஒவ்வொரு 100 ரூபாய் கடன் தொகைக்கு 58 காசு மட்டுமே வட்டியாக வசூலிக்கப்படும். மற்ற வங்கிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இது மிகக்குறைந்த வட்டிவிகிதம் ஆகும். தங்கத்தின் சந்தை மதிப்பில் 80 சதவீதத்துக்கு கடன் வழங்கப்படுகிறது. 

விவசாயிகள் வேளாண் தங்க நகை கடன் திட்டத்தின்கீழ், பயிர் சாகுபடி, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பிறவேளாண் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு கடன்பெறலாம். மேலும் சில குறுகியகால தங்கக்கடனும் வங்கி மூலம் வழங்கப்படுகிறது. அதில் ‘பம்பர் அக்ரி ஜூவல்’ கடன் திட்டத்தின் கீழ் தங்கநகை மதிப்பில் 85 சதவீதத்தை கடனாக பெறுவதோடு, 6 மாதங்களில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இதேபோல், சிறு, நடுத்தர தொழில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வு நோக்கங்களுக்கும் தங்கநகைக்கடன் வழங்கப்படுகிறது. வங்கியின் அனைத்து கிளைகளிலும் நகைக்கடன் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படுகிறது என இந்தியன் வங்கி சார்பில் . தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory