» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 12:36:04 PM (IST)

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதில் சாமானிய மக்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள், பிரபல தொழிலதிபர்கள், முக்கிய கட்சிகளின் அரசியல் பிரமுகர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தமிழக ஆளுநர் புரோகித், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட யாரையும் விட்டுவைப்பதில்லை. 

இந்நிலையில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லை என்றும், வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory