» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநரிடம், குடியரசு தலைவர், பிரதமர் நலம் விசாரிப்பு

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 5:00:20 PM (IST)

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம், குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் நலம் விசாரித்தனர்.

இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட 18 லட்சம் பேரை கரோனா பாதித்துள்ளது. இதேபோல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. லேசான அறிகுறி உள்ளதால் அவரை ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் மருத்துவமனையின் மருத்துவர் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தனர். முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விரைவில் குணமடைய விரும்புவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory