» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய கல்வியாளர்கள் குழு: தமிழக அரசு முடிவு

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 5:09:08 PM (IST)

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

புதிய கல்விக் கொள்கைக்கு கடந்த வாரம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்டது. அதில் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பிடித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழ்; தொடர்புமொழி ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையைக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை, `தாய்மொழி - ஆங்கிலம் - விருப்பமொழி என்ற மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது. இதில், விருப்பமொழி என்பது மறைமுகமாக இந்தியைத் திணிக்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 

இந்நிலையில், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அனுமதிக்கப்படாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியிருந்தார். இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory