» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக்கூடாது?- உயர்நீதிமன்றம் கேள்வி

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 5:41:12 PM (IST)

டாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச முட்டைகள் வழங்கவும், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மையங்கள் மூலமாக மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுதா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணை நடைபெற்ற போது,  பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரே மாதிரியான மாத்திரைகளை அனைவருக்கும் வழங்க முடியாது என்றும், அதில் பிரச்சனை உள்ளதாகவும் தெரிவித்தார். மாணவ-மாணவிகளுக்கு முட்டை வழங்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு சானிடரி நாப்கின் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூக இடைவெளி பிரச்சனை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் அப்படியானால் டாஸ்மாக்கை மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டியதுதானே? என கேள்வியை முன் வைத்தனர். தொடர்ந்து பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு முறையாவது அல்லது இரு முறையாவது எப்படியாவது முட்டை வழங்க வேண்டும் என்றும், எப்படி வழங்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும்? எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதனால் அரசு தரப்பில் ஒரு நாள் அவகாசம் வேண்டும் என கோரப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory