» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் கருணாஸ் உட்பட மேலும் இரு எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா தொற்று உறுதி

புதன் 5, ஆகஸ்ட் 2020 3:37:52 PM (IST)

தமிழகத்தில் நடிகர் கருணாஸ் உட்பட மேலும் இரு எம்எல்ஏக்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அதேபோன்று களப்பணியில் ஈடுபட்டு வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் இரு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பூம்புகார் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ்-க்கு இன்று உறுதியான நிலையில் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, தற்போது திண்டுக்கலில் இருக்கும் நடிகரும், திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் -க்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அவரது பாதுகாவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது கருணாஸ்-க்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory