» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எஸ்.வி. சேகருக்கு மான, ரோஷம் இருந்தால் ஊதியத்தை திருப்பி அளிப்பாரா? அமைச்சர் கேள்வி

புதன் 5, ஆகஸ்ட் 2020 5:49:07 PM (IST)

எஸ்.வி. சேகருக்கு மான, ரோஷம் இருந்தால் 5 ஆண்டுகள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய போது வாங்கிய ஊதியத்தையும், தற்போது வாங்கும் ஓய்வூதியத்தையும் திருப்பி அளிக்க தயாரா என அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய கல்விக்கொள்கை குறித்து, தமிழகஅரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடம் இல்லை. இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு திமு உள்பட அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. இதனையடுத்து, "அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும்” என்று கூறி எஸ்.வி.சேகர் விடியோ சர்ச்சையை எழுப்பியது.

இந்நிலையில், சென்னையில் இன்று அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், எஸ்.வி.சேகரை ஜெயலலிதா அடையாளம் காட்டிய பிறகு தான் அவர் மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக கொடியை, அண்ணாவைக் காட்டித்தான் வாக்கு வாங்கி வெற்றி பெற்றார். "அவருக்கு மான, ரோஷம் இருந்தால், 5 ஆண்டுகள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய போது வாங்கிய ஊதியத்தையும், தற்போது வாங்கும் ஓய்வூதியத்தையும் அரசாங்கத்துக்கு திருப்பி அளிக்க தயாரா? என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ஜெயகுமார், இவை இரண்டுக்கும் அவர் முதலில் பதில் சொல்லட்டும். ஆதாரம் இல்லாமல் அவர் விளம்பரத்திற்காக பேசும் பேச்சுக்கள் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது” என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory