» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுகவை 6வது முறையாக அரியணையில் ஏற்றுவோம் - கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் சபதம்

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 4:17:21 PM (IST)

நாளை பற்றிய நம்பிக்கை அளிக்கும் இயக்கம் திமுக இயக்கம். ஆறாவது முறையாக திமுகவை அரியணை ஏற்ற உங்கள் நினைவு நாளில் சூளுரைக்கிறோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு இடத்திற்கு இன்று காலையிலேயே மவுன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். இந்த நிலையில் ஸ்டாலின் புதிதாக வீடியோ செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இன்னும் இதயம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது நம் உயிரினும் தலைவர் நம்மோடு இல்லை என்பதை. அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு யுகங்களை கடந்தது போல இருக்கிறது. எனது கண்களில் அவரது முகமாகவே இருக்கிறது

எங்கு நோக்கினும் அவரது முகமாகவே இருக்கிறது. ஜூன் 3 புதிய தமிழ் பிறந்த நாள். ஆகஸ்ட் 7 அவர் மூச்சொலி நின்ற நாள் மட்டுமல்ல எண்ணற்றோர் சுவாசிக்க மறந்த நாள். நலமாய் இருக்கிறார் என்ற ஒன்றை சொல்லை கேட்க தவமிருந்தோம். 13 முறை சட்டமன்ற உறுப்பினர் 5 முறை முதல்வர். தமிழ்நாட்டை வாழ வைத்தவர். திருக்குவளையில் பிறந்த நவீன சிற்பி. கருணாநிதி நிறைவேற்றிய சாதனைகள் நிறையவே இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு அவருடைய பெயர் நினைவு கூறப்படும். முத்தமிழ் அறிஞரின் புகழ் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

நீங்கள் இட்ட கட்டளையை தொடர்கிறோம் தலைவரே...கொள்கை இல்லை என்றால் உயிரில்லை. இன்றைய தினம் கொள்கையும் தியாகமும் இருக்கிறது. ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம், திமுக நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. இனத்திற்கோ, மொழிக்கோ ஒரு தடங்கள் என்றால் முதல் குரல் நம் குரல்தான். கழகத்தை வீழ்த்த எத்தனையோ அவதூறுகள், பொய் புனைவுகள் பரப்பப்படுகின்றன நாங்கள் தீயை தாண்டிக் கொண்டிருக்கிறோம். நாளை பற்றிய நம்பிக்கை அளிக்கும் இயக்கம் திமுக இயக்கம். ஆறாவது முறையாக திமுகவை அரியணை ஏற்ற உங்கள் நினைவு நாளில் சூளுரைக்கிறோம், ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளுடன் மோதிக்கொண்டிருக்கிறோம். இரண்டு எதிரிகளையும் வென்று அடுத்த ஆண்டு இதே நாளில் உங்கள் முன் நிற்போம் என்று கூறியுள்ளார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory