» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ. 5,000 நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 4:43:59 PM (IST)

கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

நெல்லை மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ. 5,000 வழங்கப்படும் என அறிவித்தார். கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூபாய் 103 கோடியில் 500 ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டுள்ளது. மேலும், 108 ஆம்புலன்ஸ் பணிபுரியும் அவசரகால பணியாளர் மற்றும் ஓட்டுநருக்கு தலா ரூ. 5,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிAug 7, 2020 - 05:16:57 PM | Posted IP 162.1*****

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கவேண்டும் என்று கேட்டபோது அவங்க வேலையே அதுதானே என்று சொன்னதும் இந்த வாய் தானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory