» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 10ம் தேதி நடக்க இருந்த கடையடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு- விக்கிரமராஜா

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 5:01:48 PM (IST)

தமிழகத்தில் 10ம் தேதி நடக்க இருந்த கடையடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: தமிழகத்தில் வரும் 10ம் தேதி நடக்க இருந்த மார்க்கெட் மூடல், கடையடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க ஏற்பாடு செய்வதாக அரசு உறுதியளித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி வர இருப்பதாலும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory