» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மூக்கு அறுவை சிகிச்சை செய்து முகத்தை மாற்றிய இலங்கை தாதா: விசாரணையில் தகவல்

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 5:29:52 PM (IST)

சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி இலங்கை நிழல் உலக தாதா அங்ககொடா லொக்கா மூக்கு அறுவை சிகிச்சை செய்து இருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கை நிழல் உலக தாதா அங்ககொடா லொக்கா கொலை வழக்கில் தனிப்படைகள் மதுரை, ஈரோடு, கோவையில் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிபிசிஐடி-யிடம் இந்திய உளவு அமைப்பான "ரா" அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளது. கோவையில் உயிரிழந்தது லொக்கா என்பதை உறுதி செய்வதற்காக டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட உள்ளது. 

லொக்காவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் சென்னை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடலிலிருந்து எடுக்கப்பட்ட இதயமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.  இந்த வழக்கில் கைதான சிவகாம சுந்தரியின் 7 வங்கி கணக்கிற்கு ரூ.1 கோடி வரை பணம் பரிமாற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, சிபிசிஐடி நடத்திய விசாரணையில் கோவை தனியார் மருத்துவமனையில் அவர் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் பாலாஜி நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி மூக்கை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்து இருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. மூக்கை அறுவை சிகிச்சை செய்து மாற்றி தனது தோற்றத்தை மாற்றியுள்ளதும் சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory