» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா பரவல் குறைந்தால்தான் பள்ளிகள் திறப்பு : முதல்வர் பழனிசாமி திட்டவட்ட அறிவிப்பு

சனி 8, ஆகஸ்ட் 2020 4:03:11 PM (IST)

கரோனா பரவல் குறைந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிற பணியாளர்கள் கரோனா தொற்றில் உயிரிழந்தால் ரூ. 25 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. கரோனாவுக்கு மருந்து சுய தனிமைதான். இதையே மத்திய சுகாதாரத் துறை கருத்தைத்தான் அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும்.

டெல்டா பகுதிக்கு போதிய தண்ணீர் வழங்கப்பட்டு வருவதால் 3.50 லட்சம் ஏக்கர் நடவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 4 லட்சம் ஏக்கர் நடவு செய்யப்பட உள்ளது. இதுவரை அதிகபட்சமாக 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வரலாற்று சாதனையாக கூடுதலாக 5 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்குத் தண்ணீர் தொடர்ந்து வரும்பட்சத்தில் கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்.

மேட்டூர் உபரி நீர் திட்டம் அடுத்த ஆறு மாதத்தில் நிறைவேற்றப்படும். இதன்மூலம் சேலம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் வறண்ட நிலையில் உள்ள 100 ஏரிகளில் நீர் நிரப்பி விவசாயம் செய்யப்படும். சேலம் தலைவாசல் அருகே கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் மருத்துவக்கல்லூரி பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 6 மாதத்தில் பணிகள் முடிவடையும்.தமிழகத்தில் முதல்வர் சிறப்பு குறைதீர்வு முகாமில் பெறப்பட்ட மனுக்களில் சேலம் மாவட்டத்தில் 32,468 பேருக்கு முதியோர் உதவித் தொகை மற்றும் 13,153 பேருக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசின் நிலைப்பாடு ஆங்கிலம், தமிழ் என்ற இருமொழி கொள்கைதான். அதற்காகக் குழு அமைத்துள்ளது. அந்த குழு அறிக்கைப்படி அரசு செயல்படும். கரோனா பரவல் குறைந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும். குறிப்பாக இபாஸ் முறையை மேலும் எளிமையாக்க அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளோம். தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்.மக்களவை தேர்தலின்போது பாஜகவுக்காக அதிமுக பிரசாரம் செய்தோம். அப்போது எஸ்வி.சேகர் பாஜகவுக்கு எங்குமே வாக்கு சேகரிக்க வரவில்லை. அதனால் அவரை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory