» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் : ஜான் பாண்டியன் கோரிக்கை

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 10:08:59 AM (IST)


கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் கயத்தாறு பாரதி நகருக்கு வந்து இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் உறவினர்களை சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா மற்றும் மழை காலம் என்பதால் உயிரிழந்தவர்களின் உடல்களை பார்க்க முடியாத நிலை உள்ளது.

கேரளா அரசு உயிரிழந்த ஒவ்வொருக்கும் ரூ 5லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இவர்களின் வாழ்வாதாரம், குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு உயிரிழந்த ஒவ்வொருக்கும் தலா ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளா அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இது தொடர்பாக விரைவில் கேரளா முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory