» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 2பேருக்கு கரோனா தொற்று உறுதி

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 12:47:56 PM (IST)

இன்று ஒரே நாளில் இரண்டு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 2பேருக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பொதுப்பணிகளில் உள்ளவர்களான அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் உள்ளிட்டவர்களையும் பாதித்து வருகிறது. இதுவரை திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பல்வேறு எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 2பேருக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாணிக்கத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல், மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory