» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தற்காலிக நீக்கத்தை வாபஸ் பெற வேண்டும்; மு.க.ஸ்டாலினுக்கு, கு.க.செல்வம் கடிதம்

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 12:50:00 PM (IST)

தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கத்தை வாபஸ் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு, கு.க.செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தங்களுடைய 5-8-2020 தேதியிட்ட நோட்டீஸ் கிடைக்கப்பெற்றது. கிடைத்த 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், பதில் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நடவடிக்கை எடுத்து என்னை தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளீர்கள். ஆகவே, என் பதில் கிடைக்கும் முன்னரே நான் குற்றவாளி என்று ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே தங்களின் தற்காலிக நீக்கத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். சட்டப்படி விசாரணை வைத்தால், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory