» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் இ பாஸ் முறை தொடர்ந்து நீடிக்கும் : தலைமை செயலாளர் திட்டவட்ட அறிவிப்பு

வியாழன் 13, ஆகஸ்ட் 2020 4:42:30 PM (IST)

இ பாஸ் முறை தொடர்ந்து நீடிக்கும் என்றும் அதில் உள்ள குறைபாடுகள் களையப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் சண்முகம் நேற்று ஆய்வு நடத்தினார் இதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் இ-பாஸ்  வழங்குவதை எளிமைப்படுத்த  மாவட்டவாரியாக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, இ-பாஸ் வழங்குவது குறித்த குறைபாடுகளை களைய  நடவடிக்கை எடுத்து வருகிறோம், அதை நானே நேரடியாக ஆய்வு செய்து வருகிறேன், அவசியமான பணிகளுக்கு அதை பயன்படுத்த வேண்டும், 

சிலர் தவறான தகவல்களை வழங்குகிறார்கள், சொந்தகாரர்களை பார்க்க போக வேண்டும் என்று நினைக்கிறார்கள், அதை தவிர்க்க வேண்டும், தொழிலுக்கு தினமும் போக நினைப்பவர்களுக்கு இ பாஸ் வழங்கப்படுகிறது,  மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் இ பாஸ் திட்டம் தொடர்ந்து நீடிக்கும். சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருகிறது, மாவட்ட நிர்வாகங்கள்  சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன, முகக்கவசங்கள் அணிவதும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் குறித்து மக்களிடையே இன்னும் விழிப்புணர்வு அவசியம், வீடு வீடாக முகக்கவசங்களை வழங்க அறிவுறுத்தியிருக்கிறோம், 

முகக்கவசங்கள் அணிவதும் குறித்தும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் குறித்தும் காவல்துறையுடன் இணைந்து கடுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், கரோனா நோய்த்தொற்றுள்ளவர்களை தொடர்பு கொண்டவர்களை தனிமைப்படுத்தப்படுதலை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும், நோய்த்தொற்று  எங்கு அதிகமாக உள்ளது என்பதை அறிந்து காய்ச்சல் தடுப்பு முகாம்களை அமைக்க வேண்டும் காய்ச்சல் தடுப்பு முகாம்களை மேலும் அதிகரிக்க வேண்டும், மாவட்ட அளவிலும் மாநில அளவிலும்  தொற்றுக்களை தடுக்க சிறப்புக் குழுக்களை அமைக்க இருக்கிறோம், சென்னையில் இனி 24 மணிநேரத்தில் பரிசோதனை முடிவுகள் வெளியாகும். நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது அந்தந்த கலெக்டர்கள் நேரில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தலைமை செயலாளர் சண்முகம் கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory