» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேசியக்கொடியை அவமதித்ததாக வழக்குப்பதிவு: நடிகர் எஸ்.வி.சேகர் கைதாவாரா?

வெள்ளி 14, ஆகஸ்ட் 2020 8:29:08 AM (IST)

தேசியக்கொடியை அவமதித்ததாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் (40). தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை செய்கிறார். இவர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் கூறி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் மனு ஒன்றை அனுப்பிவைத்தார். அந்த மனுவில், நடிகர் எஸ்.வி.சேகர், யூ-டியூப் சேனல் ஒன்றில் இந்திய தேசியக்கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் என்றும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். தேசிய கொடியை அவமதித்ததாக அவர் மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே அதிமுகவை எஸ்.வி.சேகர் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்  மீது கைது நடவடிக்கை பாயும் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory