» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தடைகளை தகர்க்கும் விநாயகருக்கே தடை போடுவதா? பாஜக மாநில தலைவர் முருகன்!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2020 1:10:57 PM (IST)

தடைகளை தகர்க்கும் விநாயகருக்கே தடை போடுவது வேதனை அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். பல்வேறு பணிகளுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும் சூழலில் விநாயகர் சிலைகளை நிறுவ தடை ஏன் விதிக்க வேண்டும். விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். விநாயகர் சிலைகளை நிறுவி தனிமனித இடைவெளியோடு மக்கள் தரிசிக்க அனுமதி தர வேண்டும். தடைகளை தகர்க்கும் கடவுளான விநாயகருக்கே தடை போடுவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory