» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊரடங்கில் தொழிற்சாலைகளுக்கு 90% மின்கட்டணம்: மின்வாரிய உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2020 3:48:07 PM (IST)

ஊரடங்கு காலத்தில் 90 சதவீத மின் கட்டணத்தை செலுத்தும்படி தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா பரவல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சுமார் 3 மாதங்களாக தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின. இதன் பின்னர் தமிழக மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஊரடங்கு காலத்தில் 90 சதவீத மின் கட்டணத்தை செலுத்தும்படி தொழிற்சாலைகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து தொழிற்சாலைகளுக்கு அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக நூற்பாலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் சங்கங்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஊரடங்கு காலத்தில் 90 சதவீத மின் கட்டணத்தை செலுத்தும்படி தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் கரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை தொழிற்சாலைகளுக்கு குறைந்த அளவே மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory