» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வடமாநில மாணவர்கள் நீட் தேர்வை பார்த்து எழுதி தேர்வு பெறுகிறார்கள் - சீமான் குற்றச்சாட்டு

சனி 19, செப்டம்பர் 2020 10:14:43 AM (IST)

வடமாநில மாணவர்கள் நீட் தேர்வை பார்த்து எழுதி தேர்வு பெறுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் சின்னபோரூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் சமூக நீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: நீட் தேர்வை தடுக்க முடியும். வடமாநில மாணவர்கள் நீட் தேர்வை பார்த்து எழுதி தேர்வு பெறுகிறார்கள் என தெரிகிறது. 

நீட் தேர்வுக்கு எதிராக கட்சிகள், அமைப்புகள் போராடி கொண்டிருக்கிறோம். ஆனால் அரசு போராடினால் பெரும் எழுச்சியை கொண்டு வரமுடியும். பா.ஜ.க. பெரும்பான்மையுடன் இருப்பதால் நினைத்ததை சாதிக்கின்றனர். தி.மு.க. நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கினால் மகிழ்ச்சிதான். ஆனால் யாரிடம் சொல்லி நிறுத்துவார்கள். நீட் தேர்வால் மாணவர்களின் பெற்றோர், தனியார் பள்ளிகளை நோக்கி செல்லும் நிலை ஏற்படும். அதற்காகத்தான் இந்த கொள்கையை எடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

MASSSep 21, 2020 - 02:46:54 PM | Posted IP 162.1*****

SIRISUDE IRRUKIRAVANTHAN KOMALI..!

தூத்துக்குடி தங்க மகன்Sep 20, 2020 - 03:48:19 PM | Posted IP 108.1*****

இவன் ஒரு கோமாளி. இவனுக்கு என்ன தெரியும். சிரிப்புதான் வருகிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory