» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மோடி பிறந்த நாள் விழாவில் பட்டாசு வெடித்து விபத்து: பா.ஜக பிரமுகர், சிறுவர்கள் உட்பட 10 பேர் தீக்காயம்

சனி 19, செப்டம்பர் 2020 10:21:07 AM (IST)

சென்னையில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பா.ஜ.க. பிரமுகர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர்.

சென்னை பாடி திருவலிதாயம் சிவன் கோவில் முன்பு நேற்று மாலை பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை கொண்டாடினர்.  இதில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. வினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின்போது வானில் பறக்க விடுவதற்காக ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட நூற்றுக்கணக்கான பலூன்களை தயாராக வைத்து இருந்தனர். அந்த பலூன்களை பிடிக்க அப்பகுதி சிறுவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.

இந்த விழாவில் பா.ஜனதா விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் கலந்து கொண்டார். அவரை மாலை அணிவித்து வரவேற்றனர். இதற்காக அங்கு சரவெடி வெடிக்கப்பட்டது. பட்டாசில் இருந்து சிதறிய நெருப்பு துகள்கள், அங்கு பறக்கவிட வைத்து இருந்த பலூன்கள் மீது விழுந்தது.

இதில் பலூன்களில் இருந்த ஹீலியம் வாயு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதில் இருந்து வந்த பெரும் நெருப்பு பிழம்பு அங்கிருந்த பா.ஜனதா கூட்டத்தினர் மீது விழுந்தது. இந்த தீ விபத்தில் விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன், பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் அங்கிருந்த சிறுவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர். அனைவரும் உடனடியாக அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி கொரட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory