» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வரும், துணை முதல்வரும் ராமர்-லட்சுமணன் போல ஒற்றுமையாக உள்ளனர்: அமைச்சர் உதயகுமார்

சனி 19, செப்டம்பர் 2020 12:11:59 PM (IST)

முதல்வரும், துணை முதல்வரும் ராமர்-லட்சுமணன் போல ஒற்றுமையாக உள்ளனர் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறினார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆயத்த பணிகளில் அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தைகளும் ஒருபக்கம் சத்தமில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் கொரோனா காலத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

பரபரப்பான இந்த அரசியல் காலகட்டத்தில் அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

அ.தி.மு.க.வில் யார் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பது தொடர்பாக நிர்வாகிகளிடையே எழுந்த காரசார விவாதங்களையடுத்து, உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தின் முடிவில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை வருகிற 28-ந் தேதி கூட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது. ஆரோக்கிய நிலையை உருவாக்கவே ஆலோசனை நடந்தது. ராணுவ கட்டுப்பாட்டுடன் அதிமுக இருக்கிறது. அதிமுக அன்பு என்னும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அனைவரும் கருத்துகளை தெரிவிக்கவே அவசரக்கூட்டம்.

முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ராமர்-லட்சுமணன் போல ஒற்றுமையாக உள்ளனர். முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது என அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைக்கும் கூட்டணியால் எதிர்க்கட்சிகள் திக்குமுக்காடிபோகும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

ஆசீர். விSep 19, 2020 - 03:50:01 PM | Posted IP 162.1*****

அப்போ முதல்வர் பதவியை யார் கிட்டேயாவது கொடுத்துட்டு வனவாசம் போக சொல்லுங்க பாஸ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory