» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் ஊழியரை உயிரோடு எரிக்க முயன்ற சைக்கோ கணவன் : கதவை உடைத்து மீட்ட போலீசார்!

சனி 19, செப்டம்பர் 2020 5:40:29 PM (IST)

குளச்சல் அருகே நீதிமன்ற பெண் ஊழியரை அவரது கணவர் மிக கொடூரமாக சித்ரவதை செய்த வீடியோ காட்சிகள் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பாலப் பள்ளம் நெடு விளையை சேர்ந்தவர் சுரேஷ்ராஜன் (53). இவரது மனைவி ஹெப்சிபா (40). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடமாகிறது. குழந்தைகள் இல்லை. ஹெப்சிபாவுக்கு கடந்த 2ம் தேதி தான், இரணியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் பணி கிடைத்தது.இந்த நிலையில் கடந்த 7ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஹெப்சிபாவை வீட்டின் நாற்காலியில் கட்டி வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி சுரேஷ் ராஜன் எரித்து கொல்ல முயன்றார். மேலும் அரிவாளால் வலது காலிலும் வெட்டினார். ஹெப்சிபாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் குளச்சல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று ஹெப்சிபாவை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். காலில் பலத்த வெட்டுக்காயம் இருந்ததால், அவர் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளார். சுரேஷ்ராஜன் கைது செய்த போலீசார், அவர் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து, நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். ஹெப்சிபாவின் தங்க நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ஆவணங்களையும் காணவில்லை, இதை திரும்ப ஒப்படைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெப்சிபா வின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதற்கிடையே ஹெப் சிபாவை, சுரேஷ்ராஜன் செய்த சித்ரவதை காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹெப்சிபாவை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து கை, கால்களை கட்டி கண்களையும் கட்டி வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றியதுடன், அரிவாளால் சரமாரியாக வெட்டிய தடயங்களும். இந்த கொடுமை தாங்காமல், ஹெப்சிபா அலறுகிறார். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். போலீசார் சென்றபின், பொது மக்களும் உள்ளே நுழைந்து, ஹெப்சிபாவை மீட்டனர். இந்த வீடியோ காட்சி நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory