» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக முதல்வரின் தூத்துக்குடி பயணம் திடீர் ரத்து

ஞாயிறு 20, செப்டம்பர் 2020 11:35:56 AM (IST)

தமிழக முதல்வரின் தூத்துக்குடி பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். இதில் வரும் 22ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு, கார் மூலம் மதியம் 3 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக தூத்துக்குடி வருகை தர இருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் அதே தினத்தன்று (22ஆம் தேதி) காலை 11 மணிக்கு பிரதமருடன் காணொளி காட்சி மூலம் கலந்தாய்வு இருப்பதால் அவரது தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

k.rajaSep 21, 2020 - 02:26:45 PM | Posted IP 108.1*****

varuvaru aanavaramataru

TruthSep 21, 2020 - 10:10:35 AM | Posted IP 108.1*****

Ivar inga vanthu enna aaga poguthu

சாமிSep 20, 2020 - 07:57:17 PM | Posted IP 108.1*****

Trip cancel for OPS/EPS fighting hahaha

M.sundaramSep 20, 2020 - 05:05:26 PM | Posted IP 162.1*****

What about Ramanathapuram and Knyakumari program?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory