» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெளிநாடுகளில் சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த 1 கிலோ தங்கம் பறிமுதல் : 6 பேர் கைது

வெள்ளி 25, செப்டம்பர் 2020 10:44:15 AM (IST)

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்களில் கடத்தி வந்த ரூ.57 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 98 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.

கரோனா வைரஸ் ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிப்பவர்கள் சிறப்பு விமானங் கள் மூலம் சென்னை அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த 35 வயது வாலிபரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரது உடைமையில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 5 டிரோன் கேமராக்கள், விலை உயர்ந்த 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.26 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 510 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள்.

அதேபோல் தோகா மற்றும் குவைத்தில் இருந்து வந்த 2 சிறப்பு விமானங்களில் வந்த விருதுநகரை சேர்ந்த 3 பேர், ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த 2 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது அவர்களது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.30 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 586 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். மொத்தம் 6 பேரிடம் இருந்து ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 96 கிராம் தங்கத்தையும், ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள டிரோன் கேமராக்கள், செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பிடிபட்ட 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory