» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலன் காலமானார்

புதன் 30, செப்டம்பர் 2020 5:00:29 PM (IST)

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் இன்று காலமானார். 

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் வயது 94. கடந்த 26ஆம் தேதி மாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து போரூரில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

மேலும் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த பின்னர் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் காலமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதமும் ராமகோபாலன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory