» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிக்பாஸ் பிஆர்ஓ; மக்களைப் பற்றி கவலைப்படாதவர் முதல்வர் வேட்பாளரா? கமலை கலாய்க்கும் அமைச்சர்!

சனி 17, அக்டோபர் 2020 3:16:25 PM (IST)

கமல்ஹாசனை நான் பிக்பாஸ் பிஆர்ஓவாகத்தான் பார்க்கிறேன் 6 மாதமாக எங்கோ ஒளிந்து இருந்து விட்டு இப்போது முதல்வர் வேட்பாளராக வருகிறார். என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் விஜய் சேதுபதி முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி ரசிகர்கள் விரும்பவில்லை. தமிழர்களுக்கு எதிராக இருந்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

அவரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கமல்ஹாசனை நான் பிக்பாஸ் பிஆர்ஓவாகத்தான் பார்க்கிறேன் என்றார். கடந்த ஆறு மாதமாக எங்கோ சென்று ஒளிந்து இருந்து விட்டு இப்போது வந்தவுடன் முதல்வர் வேட்பாளராக வருகிறார். அவருக்கு மக்களைப் பற்றி கவலை எல்லாம் இல்லை என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.

நீட் தேர்வு கவுன்சிலிங்கில் எந்த தாமதமும் ஏற்படாது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்யும். நீட் தேர்வு முடிவு குளறுபடி தொடர்பாக அகில இந்திய மருத்துவ தேர்வு மையத்தை தான் கேள்வி கேட்க வேண்டும் என்றும் கூறினார். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory