» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3ஆயிரம் உதவித் தொகை: முதல்வர் பழனிசாமி தொடக்கிவைத்தார்

புதன் 28, அக்டோபர் 2020 12:22:36 PM (IST)

தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி துவக்கி வைத்தார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப்படிப்பினை முடித்து விட்டு, வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. 

இக்கால கட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் இருப்பதோடு, ஒரு சிலர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விடும் நிலையும் உள்ளது. இதனால் வறுமை நிலையில் இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தமிழக அரசு அவர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

kumarOct 28, 2020 - 12:28:36 PM | Posted IP 108.1*****

ithu oru mosamana munutharanamaga amainthuvidum....patta padippu paditha pala manavargal padithu mudithavuden velaiku selvathillai.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory