» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கர்நாடகாவில் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை : குடும்பத்தினர் கோரிக்கை

புதன் 28, அக்டோபர் 2020 5:21:46 PM (IST)கர்நாடகத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

குமரி மாவட்டம் பிள்ளை தோப்பை சேர்ந்த சின்னப்பன் மகன் ராபின்சன் (36), கன்னியாகுமரியை சேர்ந்த வில்லியம் மகன் டென்னிஸ்(56), வாவுதுறையை  சேர்ந்த அந்தோணி முத்து மகன் அருள்ராஜ் (42), மணக்குடி யை சேர்ந்த செல்லத்தம்பி மகன் ஜோசப் (50), அழிக்காலை  சேர்ந்த ஸ்டனிஸ்லாஸ் மகன் அருள் சீலன் (40), கடியப்பட்டணத்தை சேர்ந்த செல்வம் மகன்கள்  சுபின்(20),  பிரவின் (18), முட்டத்தை சேர்ந்த ஜேம்ஸ் மகன் ரோஹன் டிஜோ (18 )பெரியவிளையை சேர்ந்த விக்டர் மகன் சாமுவேல் (18 )எறும்புகாடை சேர்ந்த ராஜன் மகன் சக்கரியா (27)   ஆகிய 10 மீனவர்களும் கேரளாவில் உஸ்மான்  என்பவருக்கு சொந்தமான இந்தியன் விசைப்படகில் கடந்த 19 ம் தேதி கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 

மீனவர்கள் கர்நாடக மாநிலம் மால்பே என்ற பகுதிக்கு ஆழ்கடலில் சுமார் 23 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடந்த 22ம் தேதி கர்நாடக மீனவர்கள் 10 படகுகளில் சென்று ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் கடலுக்குள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். படகில் இருந்த மீனவர்களை கடுமையாக ஆயுதங்களோடு தாக்கி காயப்படுத்தி உள்ளனர். ஓட்டுநர் ராபின்சன் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களும் கர்நாடக மீனவர்களால் தாக்கப்பட்டனர். இந்தியன் என்ற விசைப்படகையும் அதிலிருந்த 10 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களையும் பிணைய கைதியாக கர்நாடக மீனவர்கள் மால்பே பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். காயப்பட்ட 10 மீனவர்களும் மல்பேயிலுள்ள கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். கர்நாடக மாநில கடலோர காவல் குழுமம்  கன்னியாகுமரி மீனவர்கள் காயப்படுத்த பட்டிருந்ததால் அவர்களை உடுப்பி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10 பேரும் ஆயுதங்களோடு கர்நாடக மாநில மீனவர்களை தாக்கியதாக மீனவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து  உடுப்பி சிறையில் அடைந்துள்ளனர்.  சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 10 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களையும் விரைந்து விடுவிக்க தமிழக அரசு கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மீனவர்களுக்கு ஆழ்கடலில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில் தலைமையில் மீனவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.


மக்கள் கருத்து

அருண்Oct 28, 2020 - 10:26:30 PM | Posted IP 103.1*****

இதையெல்லாம் அரசாங்கம் வேடிக்கை பார்க்க கூடாது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory