» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

2021ம் ஆண்டில் தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் : அரசாணை வெளியீடு

புதன் 28, அக்டோபர் 2020 5:39:12 PM (IST)

2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆண்டின் இறுதி மாதங்களில் அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை அரசு வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் 2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும். மேலும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2021ம் ஆண்டில் தமிழக அரசு விடுமுறை தினங்கள்

ஜனவரி 1 (வெள்ளிக்கிழமை) ஆங்கில புத்தாண்டு

ஜனவரி 14 (வியாழக்கிழமை) பொங்கல்

ஜனவரி 15 (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம்

ஜனவரி 16 (சனிக்கிழமை) உழவர் திருநாள்

ஜனவரி 26ம் தேதி (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினம்

ஏப்ரல் 1 (வியாழக்கிழமை) வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு

ஏப்ரல் 2 (வெள்ளிக்கிழமை) புனித (வெள்ளி

ஏப்ரல் 13 (செவ்வாய்க்கிழமை) தெலுங்கு வருட பிறப்பு

ஏப்ரல் 14 (புதன்கிழமை) தமிழ் புத்தாண்டு / டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்

ஏப்ரல் 25 (ஞாயிற்றுக்கிழமை) மகாவீரர் ஜெயந்தி

மே 1ம் தேதி (சனிக்கிழமை ) மே தினம்

மே 14 (வெள்ளிக்கிழமை) ரம்ஜான்

ஜூலை 21 (புதன்கிழமை) ) பக்ரீத்

ஆகஸ்ட் 15 (ஞாயிற்றுக்கிழமை) சுதந்திர தினம்

ஆகஸ்ட் 20 (வெள்ளிக்கிழமை) மொகரம்

ஆகஸ்ட் 30 (திங்கட்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 10 (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி

அக்டோபர் 2ம் தேதி (சனிக்கிழமை) காந்தி ஜெயந்தி

அக்டோபர் 14 (வியாழக்கிழமை) ஆயுத பூஜை

அக்டோபர் 15 (வெள்ளிக்கிழமை) விஜயதசமி

அக்டோபர் 19 (செவ்வாய்க்கிழமை) மிலாதுநபி

நவம்பர் 4 (வியாழக்கிழமை) தீபாவளி

டிசம்பர் 25 , (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory