» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி? - சீமான் பேட்டி

வியாழன் 19, நவம்பர் 2020 4:51:34 PM (IST)

சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் சரிபாதியாக 117 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகமான ராவணன் குடிலில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சீமான் நேற்று (நவம்பர் 18) மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ஸ்டாலின் தொகுதியில் அவரை எதிர்த்து நீங்கள் போட்டியிடப் போவதாக தகவல்கள் வந்துள்ளதே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு வழக்கமான தன்னுடைய சிரிப்பை வெளிப்படுத்திய சீமான், "மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகிறார்கள். நானும் அதையே நினைக்கிறேன்” எனப் பதிலளித்தார்.

பிகாரில் தேஜஸ்வி யாதவுக்கு வந்த நிலை, தமிழகத்தில் திமுகவுக்கு வரக்கூடாது என்றால் காங்கிரஸை அது கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சீமான், அதிமுகவுக்கு எதிர்காலம் வேண்டும் எனில் பாஜகவைக் கழற்றிவிட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பாஜக நடத்தும் வேல் யாத்திரை மூலமாக நாம் தமிழருக்குத்தான் விளம்பரம் கிடைக்குமெனவும், பாஜகவுக்கு அல்ல எனவும் கூறியவர், 10 ஆண்டுகளாக தான் பேசிவரும் கொள்கைகளை தற்போது பாஜக கையில் எடுத்திருப்பதாகச் சாடினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வந்த நிலையில், ஸ்டாலினை எதிர்த்து போட்டி என அறிவித்துள்ளார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் கடலூரில் நின்ற சீமான் 12,000 வாக்குகளைப் பெற்றார். அக்கட்சி 1 சதவிகித வாக்குகளையும் பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில் 4 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வழக்கமாகத் தேர்தலில் இரண்டு தலைவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவதில்லை. எனினும், சிரித்துக்கொண்டே சொன்னதைப் பார்த்தால் இது சீமானின் இறுதி முடிவும் அல்ல என்பது தெரிகிறது.


மக்கள் கருத்து

MAKKAL அவர்களுக்குNov 21, 2020 - 06:22:14 PM | Posted IP 108.1*****

ஜோக்கர் க்கு தான் மதிப்பு அதிகம் , மக்கள் இனி திருட்டு திராவிடத்தை நம்பப்போவதில்லை...

MAKKALNov 21, 2020 - 01:54:09 PM | Posted IP 108.1*****

Sebastian Seeman can not win a councilar post then how can contest against DMK Leader.Sebastian seeman is a Joker can play for rummy.....

என்னதுNov 19, 2020 - 09:41:39 PM | Posted IP 162.1*****

தத்தி சுடலைக்கு வந்த சோதனை..

kumarNov 19, 2020 - 05:31:52 PM | Posted IP 162.1*****

simon pesuvathai ellam seriousaga eduthukolla thevaiillai....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory