» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை : தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

சனி 21, நவம்பர் 2020 10:21:17 AM (IST)

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் இளைஞர்கள் ஈடுபட்டு தங்களது பணத்தை இழந்தபின் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்யக் கோரி பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் அவரச சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

அவசர சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10000 அபராதமும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். தடையை மீறி விளையாடினால் ரூ.5000 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும். மேலும் பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory