» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
புதன் 25, நவம்பர் 2020 4:46:16 PM (IST)
நிவர் புயல் எதிரொலியாக, 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில் நிவர் புயல் எதிரொலியாக, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
புதன் 20, ஜனவரி 2021 11:44:01 AM (IST)

தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!!
புதன் 20, ஜனவரி 2021 11:34:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 14.81 லட்சம் வாக்காளர்கள் : 54 ஆயிரம் பேர் புதிதாக சேர்ப்பு - 15ஆயிரம் பேர் நீக்கம்!
புதன் 20, ஜனவரி 2021 11:06:31 AM (IST)

தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது : நாகர்கோவிலில் கனிமொழி எம்.பி. பேட்டி
புதன் 20, ஜனவரி 2021 9:01:41 AM (IST)

புதுவை ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர், அமைச்சர் தர்ணா போராட்டம்
செவ்வாய் 19, ஜனவரி 2021 4:06:08 PM (IST)

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:53:52 PM (IST)
