» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிவர் புயல் எச்சரிக்கை : 27 சிறப்பு ரயில்கள் நாளையும் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதன் 25, நவம்பர் 2020 5:05:03 PM (IST)

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து செல்லும் 27 ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுகிறது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நிவர் புயல் காரணமாக நேற்றுமுன்தினம் இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு விட்டு,விட்டு மழை பெய்தது. நேற்று பிற்பகல் முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளையும் 27 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூர் - மதுரை, மதுரை - எழும்பூர்,

எழும்பூர் - காரைக்குடி,

எழும்பூர் - செங்கோட்டை, திருநெல்வேலி - செங்கோட்டை,

தூத்துக்குடி - எழும்பூர்,

எழும்பூர் - கன்னியாகுமரி,

எழும்பூர் - கொல்லம்,

ராமேஸ்வரம் - சென்னை,

மதுரை - சென்னை (06101, 06102),

எழும்பூர் - திருச்சி,

காரைக்குடி- சென்னை எழும்பூர்,

சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையேயான பல்லவன் பகல் நேர சிறப்பு ரயில்,

மதுரை சென்னை எழும்பூர்,  மதுரை வைகை பகல் நேர சிறப்பு ரயில் உள்ளிட்ட 27 சிறப்பு ரயில்கள் நாளையும் நாளையும் (26-11-2020) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory