» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 1 முதல் தொடர் போராட்டம்: ராமதாஸ் அறி்க்கை

புதன் 25, நவம்பர் 2020 5:26:40 PM (IST)

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி டிசம்பர் 1 ம்தேதி முதல் டி.என்.பி.எஸ்.சி, அலுவலகம் முன்பு 4 நாட்கள் தொடர்போராட்டங்கள் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறி்க்கை: தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் உள்ளிட்ட அனைத்து சமுதாயங்களின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்; வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 4 ம் தேதி வரை மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன் பெருந்திரள் போராட்டங்களுக்கு பாமக தலைவர்  ஜி.கே. மணி தலைமை தாங்குவார்,

இரண்டாம் கட்டமாக டிசம்பர் 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும்.அடுத்தடுத்தக் கட்ட போராட்டங்கள் குறித்த விவரங்களும், தேதிகளும் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு,  பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory