» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூரில் முதல்வர் பழனிசாமி ஆய்வு

வியாழன் 26, நவம்பர் 2020 3:36:24 PM (IST)

தமிழகத்தில் நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், புயல் மற்றும் வெள்ள சேதத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

தென்மேற்க வங்கக் கடலில் உருவாகி நேற்று நள்ளிரவில் புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்த அதிதீவிர நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வாழை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. கடலூர் மாவட்டம் மனம்பாடி கிராமத்தில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்நிலையில், இன்று காலை சென்னையிலிருந்து கடலூர் மாவட்டத்துக்கு சாலை மார்கமாக பிற்பகலில் சென்றடைந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி பகுதியில் உள்ள குமாரமங்கலத்தில், பலத்த காற்றால் சாய்ந்து போன வாழை மரங்களை நேரில் பார்த்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தமிழக முதல்வர் பழனிசாமியுடன், அமைச்சர் எம்.சி. சம்பத், ஆட்சியர் மற்றும் வேளாண் துறை செயலர் உள்ளிட்டோரும் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory