» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இருமுடி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்!!
வியாழன் 10, டிசம்பர் 2020 3:30:12 PM (IST)
மேல்மருவத்தூர் இருமுடி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சில முக்கிய சிறப்பு ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
10.12.2020 முதல் 28.01.2021 வரை வண்டி எண் 02638 மதுரை - சென்னை பாண்டியன் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02662 செங்கோட்டை - சென்னை பொதிகை சிறப்பு ரயில் ஆகியவையும்,
11.12.2020 முதல் 29.01.2021 வரை வண்டி எண் 02635/02636 சென்னை - மதுரை - சென்னை வைகை சிறப்பு ரயில்கள் மற்றும் வண்டி எண் 02637 சென்னை - மதுரை பாண்டியன் சிறப்பு ரயில், வண்டி எண் 02661 சென்னை - செங்கோட்டை பொதிகை சிறப்பு ரயில் ஆகியவையும்,
11.12.2020 முதல் 22.01.2021 வரை வண்டி எண் 06064 நாகர்கோவில் - சென்னை சிறப்பு ரயில்,
17.12.2020 முதல் 28.01.2021 வரை வண்டி எண் 06063 சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில்,
16.12.2020 முதல் 27.01.2020 வரை வண்டி எண் 06011 கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் சிறப்பு ரயில்,
12.12.2020 முதல் 25.01.2021 வரை வண்டி எண் 06012 டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் ஆகியவை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
மேலும் வண்டி எண் 05119 மான்டுயாடிஹ் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் டிசம்பர் 15, 22 ஆகிய நாட்களிலும் வண்டி எண் 05120 மான்டுயாடிஹ் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் டிசம்பர் 16, 23, 30 ஆகிய நாட்களிலும் வண்டி எண் 08495 ராமேஸ்வரம் - புவனேஸ்வர் சிறப்பு ரயில் டிசம்பர் 13, 20, 27 ஆகிய நாட்களிலும், வண்டி எண் 08496 புவனேஸ்வர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் டிசம்பர் 11, 18, 25 ஆகிய நாட்களிலும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது : நாகர்கோவிலில் கனிமொழி எம்.பி. பேட்டி
புதன் 20, ஜனவரி 2021 9:01:41 AM (IST)

புதுவை ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர், அமைச்சர் தர்ணா போராட்டம்
செவ்வாய் 19, ஜனவரி 2021 4:06:08 PM (IST)

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:53:52 PM (IST)

அறுவை சிகிச்சைக்கு பின் கமல்ஹாசன் உற்சாகமாக உள்ளார் : மகள்கள் ஷ்ருதி, அக்ஷரா தகவல்
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:35:30 PM (IST)

சசிகலா வெளியே வந்தால் எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கு சிக்கல் : மு.க. ஸ்டாலின் பேச்சு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:25:06 PM (IST)

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்: மாணவி கைது - பரபரப்பு வாக்குமூலம்
செவ்வாய் 19, ஜனவரி 2021 12:15:15 PM (IST)
