» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அறுவை சிகிச்சைக்கு பின் கமல்ஹாசன் உற்சாகமாக உள்ளார் : மகள்கள் ஷ்ருதி, அக்‌ஷரா தகவல்

செவ்வாய் 19, ஜனவரி 2021 3:35:30 PM (IST)

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் அறுவை சிகிச்சைக்கு பின் உற்சாகமாக இருப்பதாக அவருடைய மகள்கள் ஷ்ருதி, அக்‌ஷரா ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.

தன் காலில் சிறு அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளப் போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் சில நாள்களுக்கு முன்பு கூறினார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சில ஆண்டுகளுக்கு முன்னா் ஏற்பட்ட விபத்து காரணமாக, காலில் ஓா் அறுவைச் சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடா்ச்சியாக இன்னொரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவா்கள் அறிவுறுத்தியிருந்தாா்கள். 

ஆகவே, காலில் சிறு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளை புதிய விசையுடன் தொடருவேன். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையவழியாகவும், விடியோக்கள் வழியாகவும் பேசுவேன். மாற்றத்துக்கான நம் உரையாடல் இடையூறு இல்லாமல் நிகழும் என்று கூறினார். இந்நிலையில் கமலின் மகள்களான ஷ்ருதி, அக்‌ஷரா ஆகிய இருவரும் கமலின் அறுவைச் சிகிச்சை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். 

அதில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று காலையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவுக்கு காலில் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார். நான்கைந்து நாள்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார். மகிழ்விப்பார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory