» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி

செவ்வாய் 19, ஜனவரி 2021 3:53:52 PM (IST)

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறி உள்ளார்.

பின்னர் சசிகலா தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை. ஜெயலலிதா இருக்கும்போது சசிகலா அதிமுகவிலேயே இல்லை. சசிகலாவுடன் இருந்த பெரும்பாலோனார் அதிமுகவுக்கு வந்துவிட்டனர். சிலர்தான் அவருடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

சாமிJan 20, 2021 - 03:04:37 PM | Posted IP 162.1*****

இந்த தேர்தலகுஅப்புறம் நீங்க எங்க போவீங்கனு உங்களுக்கு தெரியாது!!

TAMILANJan 19, 2021 - 04:15:24 PM | Posted IP 108.1*****

Great sir, we will vote for you , not for sasikala

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory