» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுவை ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர், அமைச்சர் தர்ணா போராட்டம்

செவ்வாய் 19, ஜனவரி 2021 4:06:08 PM (IST)

புதுவை ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் வே.நாராயணசாமி, சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏறப்ட்டது. 

துணைநிலை ஆளுநரை, 15 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சந்திக்க அனுமதி கோரி சட்டப்பேரவை வளாகத்தில் கடந்த 10 நாள்களாக  சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த 10 நாள்களாக போராடியும் ஆளுநர் கிரண்பேடி கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் திடீரென ஆளுநர் மாளிகை முன்பு அமைச்சர் கந்தசாமி இன்று தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமியும் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் புதுவை மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான் ஆகியோரும் உள்ளனர். ஆளுநர் மாளிகையை சுற்றி 13 நாள்களாக மூன்று அடுக்கு துணை ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory