» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 14.81 லட்சம் வாக்காளர்கள் : 54 ஆயிரம் பேர் புதிதாக சேர்ப்பு - 15ஆயிரம் பேர் நீக்கம்!
புதன் 20, ஜனவரி 2021 11:06:31 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 14,81,799 வாக்காளர்கள் உள்ளதாக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கே.செந்தில்ராஜ் வெளியிட்டார். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறும்போது "வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021 தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (20.01.2021) வெளியிடப்படுகிறது.
16.11.2020 முதல் 15.12.2020 வரை பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் விசாரணை செய்யப்பட்டு தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 16.11.2020 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக 25040 ஆண்கள், 28168 பெண்கள் மற்றும் 38 மூன்றாம் பாலினத்தோர் ஆக மொத்தம் 53245 வாக்காளராக சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் மற்றும் முகவரி மாறி சென்றவாகள் ஆகியோர் 15879 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2021-இல் பெறப்பட்ட 54211 விண்ணப்ப படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் 53246 விண்ணப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 965 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பெயர் நீக்கம் தொடர்பாக 16634 விண்ணப்ப படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் 15878 விண்ணப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 755 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 7,24,484 ஆண்கள், 7,57,151 பெண்கள், 164 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,81,799வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் மொத்தம் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,603 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத, 18 வயது பூர்த்தியானவர்கள் எண்ணிக்கை வாக்காளர் பட்டியலில் குறைவாகவே உள்ளதால் 01.01.2021 அன்று 18வயது பூர்த்தியான அனைத்து நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனைத்து வேலைநாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் தேர்தல் அலுவலரிடமிருந்து படிவங்களை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.
மேலும், பொதுமக்கள் கைபேசி மற்றும் கணினியில் இணையதளம் மூலம் www.nvsp.in என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பம் அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மேற்கண்ட இணையதளத்தில் படிவம் 6-ல் தங்களது புகைப்படத்தினை அடையாள சான்றாகவும், ஆதார் அட்டையினை முகவரிச் சான்றாகவும் பதிவேற்றம் செய்ய பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்கலாம்.
இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர் விவரங்கள்/புகைப்பட மாற்றம் செய்ய வேண்டியிருப்பின் உரிய ஆவணம்/புகைப்படத்துடன் சம்மந்தப்பட்ட தொகுதி வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி படிவம் -8இல் மனு செய்திடலாம். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பொது மக்கள் தகவல்களை பெறவும் மற்றும் இடர்பாடுகள் இருப்பின் தெரிவிக்கவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய இலவச தொலைபேசி எண் 0461-1950ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் தங்கள் பகுதி வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் அலுவலகங்களையும் தொடர்பு கொள்ளலாம் -எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.
புதிதாக பெயர் சேர்த்தல் (படிவம் 6), பெயர் நீக்கம் (படிவம் 7), திருத்தங்களை மேற்கொள்ளுதல் (படிவம் 8), தொகுதிக்குள் முகவரி மாற்றம் (படிவம் 8ஏ), வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க (படிவம் 6) போன்றவைகளுக்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த படிவங்களை www.nvsp.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பம் செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளர் விபரம்:
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள்- 105548, பெண்கள்- 109991, மூன்றாம் பாலினத்தவர்கள்- 4, என மொத்தம் 215543 வாக்காளர்கள் உள்ளனர்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள்- 138879, பெண்கள்- 145232, மூன்றாம் பாலினத்தவர்கள்- 53 என மொத்தம்- 284164 வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள்- 118069, பெண்கள்- 125268, மூன்றாம் பாலினத்தவர்கள்- 38, என மொத்தம்- 243375 வாக்காளர்கள் உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள்- 110132, பெண்கள்- 113622, மூன்றாம் பாலினத்தவர்கள்- 10, என மொத்தம்- 223764 வாக்காளர்கள் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள்- 122372, பெண்கள்- 127653, மூன்றாம் பாலினத்தவர்கள்- 31, என மொத்தம்- 250053 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள்- 129484, பெண்கள்- 135385, மூன்றாம் பாலினத்தவர்கள்-31, என மொத்தம்- 264900 வாக்காளர்கள் உள்ளனர்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தேர்தல் வட்டாட்சியர் ரகு, அரசியல் கட்சி பிரமுகர்கள் சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் (தி.மு.க.) சந்தானம் (அ.இ.அ.தி.மு.க.), கே.எஸ்.அர்ச்சுனன் (சி.பி.ஐ.எம்.), முரளிதரன் (காங்கிரஸ்), கனகராஜ் (பா.ஜ.க.) மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை, கோவை உள்பட 6 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறையவில்லை: சுகாதாரத் துறை செயலா்
வியாழன் 4, மார்ச் 2021 5:25:57 PM (IST)

தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வியாழன் 4, மார்ச் 2021 5:13:27 PM (IST)

அய்யா வைகுண்டசாமி 189-வது அவதார தின விழா ஊர்வலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வியாழன் 4, மார்ச் 2021 4:52:26 PM (IST)

சசிகலா அரசியலில் இருந்து விலகியதால் பாஜகவிற்கு மகிழ்ச்சி : கோவையில் சீதாராம்யெச்சூரி பேட்டி
வியாழன் 4, மார்ச் 2021 3:49:14 PM (IST)

தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி மறைவு: ஸ்டாலின் அஞ்சலி - பொன்னார் இரங்கல்!
வியாழன் 4, மார்ச் 2021 3:35:33 PM (IST)

திமுக கூட்டணியில் வி.சி.க.விற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது
வியாழன் 4, மார்ச் 2021 3:25:58 PM (IST)
