» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

புதன் 20, ஜனவரி 2021 11:34:48 AM (IST)

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான சுருக்க திருத்த பணிகள் நிறைவடைந்தன. இதுவரை பெயர் சேர்ப்பதற்கோ, திருத்துவதற்கோ, இடம் மாறியதற்காகவோ விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதன்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நவம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி டிசம்பர் 15-ம் தேதி முதல் நடந்து வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 3.08 கோடி ஆண் வாக்காளர்கள், 3.18 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். 7,246 மூன்றாம் பாலித்தனவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 6.94 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சென்னை துறைமுகம் தொகுதியில் குறைந்தபட்சமாக 1.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory