» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது : கோவையில் ராகுல் பேச்சு!!
சனி 23, ஜனவரி 2021 4:37:31 PM (IST)

தமிழ்நாட்டிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என கோவையில் பிரசாரம் செய்த ராகுல்காந்தி பேசினார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை கோவை, திருப்பூா், ஈரோடு மற்றும் கரூா் மாவட்டங்களில் 3 நாள்கள் தோ்தல் பிரசாரத்திற்காக, இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார். இன்று காலை 11:00 மணிக்கு தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்துள்ள ராகுல்காந்திக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். காலை 11:35 மணிக்கு காளப்பட்டி சந்திப்புப் பகுதியில் திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி.
அவர் ஆங்கிலத்தில் பேசியதை, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தமிழில் மொழிபெயர்த்தார். ராகுல் பேசும்போது , மோடி இந்தியாவில் உள்ள பெரிய தொழிலதிபர்கள் நண்பர்களுக்காக மட்டுமே பேசுகிறார். அவர்களுக்கு மீடியா மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை வழங்கியிருக்கிறார்.பணம் அவர்களுக்கு சொந்தமானதாக இருக்கிறது. நரேந்திர மோடி இந்திய மக்களுடைய தமிழக மக்களுடைய எல்லாவற்றையும் விற்பதற்கு தயாராக இருக்கிறார்.
விவசாயிகளின் அடிப்படை உரிமைகளை மூன்று வேளாண்மை சட்டம் மூலம் பறிக்கிறார்.இந்தியாவின் பாரம்பரிய விவசாயிகளை தொழிலதிபர்களுக்கு வேலை காரர்களாக மாற்ற நினைக்கிறார்.அதற்க்காகத்தான் நாம் அவர்களை எதிர்க்கிறோம், நாம் விவசாயிகள் பக்கம் நிற்கிறோம். இந்தியாவில் எந்த ஒரு விஷயத்திற்கும் தமிழ்நாடு தான் முன்னுதாரணமாக இருக்கும் என நம்புகிறேன். இந்தியாவிற்கு தொழில் அமைப்பு, தொழிற்சாலைகள் ,வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. தமிழ்நாடு தான் கடந்த காலங்களில் தொழில் துறையில் முன்னேறி இருந்தது. தமிழ்நாட்டிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்றார்.
துரதிஷ்டவசமாக தமிழக விவசாயிகள் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.அதனால் தான் தமிழக மக்கள் புதிய அரசை எதிர்நோக்கி கொண்டு இருக்கிறார்கள்.ஒரு புதிய அரசை உங்களுக்கு வழங்க நான் செயல்பட்டு கொண்டு இருக்கிறேன். நீங்கள் பெருமைப்படக்கூடிய விரும்பக்கூடிய ஒரு அரசை நாங்கள் தர தயாராக இருக்கிறோம். காங்கிரஸ் உங்களுக்காக செயல்படுகிறது.இன்று சிறுகுறு தொழில் செய்பவர்களுடன் உரையாட கோவை நகருக்கு வந்துள்ளேன்.
சிறு குறு தொழில் செய்பவர்கள், விவசாயிகள், மாணவர்களுக்கு காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வந்து இருக்கிறேன். உங்களுக்கும் எனக்கும் இருப்பது அரசியல் ரீதியான உறவு இல்லை, அதைத்தாண்டி தமிழக மக்களோடு ரத்த உறவு இருக்கிறது. அதனால் தான் நான் இங்கு வந்து இருக்கிறேன். உங்களுக்காக தியாகம் செய்வதற்காக தயாராக இருக்கிறேன். நான் உங்களோடு உழைக்கவும் , உங்களை உயர்த்தவும் வந்து இருக்கிறேன்.உங்களுடனான என்னுடைய உறவு தொடரும் என்றார் ராகுல்காந்தி.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை, கோவை உள்பட 6 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறையவில்லை: சுகாதாரத் துறை செயலா்
வியாழன் 4, மார்ச் 2021 5:25:57 PM (IST)

தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வியாழன் 4, மார்ச் 2021 5:13:27 PM (IST)

அய்யா வைகுண்டசாமி 189-வது அவதார தின விழா ஊர்வலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வியாழன் 4, மார்ச் 2021 4:52:26 PM (IST)

சசிகலா அரசியலில் இருந்து விலகியதால் பாஜகவிற்கு மகிழ்ச்சி : கோவையில் சீதாராம்யெச்சூரி பேட்டி
வியாழன் 4, மார்ச் 2021 3:49:14 PM (IST)

தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி மறைவு: ஸ்டாலின் அஞ்சலி - பொன்னார் இரங்கல்!
வியாழன் 4, மார்ச் 2021 3:35:33 PM (IST)

திமுக கூட்டணியில் வி.சி.க.விற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது
வியாழன் 4, மார்ச் 2021 3:25:58 PM (IST)
