» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளி மாணவி சுத்தியலால் அடித்துக் கொலை: தந்தை மாடியில் இருந்து குதித்து தற்கொலை
வெள்ளி 19, பிப்ரவரி 2021 4:55:51 PM (IST)
எடப்பாடி அருகே பள்ளி மாணவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த தந்தை, வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட, தாதாபுரம் ஊராட்சி, ஆதிக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி கோபால்(54), இவரது மனைவி மணி கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி , இத்தம்பதிகளுக்கு பிரியா(15) என்ற மகளும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர், மணி கரும்பு வெட்டும் பணிக்காக வெளியூரில் தங்கி வேலைபார்த்து வந்தார்.
அவரது மகன் கண்ணன் வெளியூரில் உள்ள பேக்ரிக்கடையில் தங்கி பணிபுரிந்து வந்தார். கோபால் தள்ளுவண்டி மூலம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். மகள் பிரியா, அருகில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கோபாலின் மனைவி மணி மற்றும் சகோதரர் கண்ணன் ஆகியோர் வெளியூரில் தங்கி வேலைசெய்து வந்த நிலையில், கோபால் தனது மகள் பிரியாவுடன், ஆதிகாட்டூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் வசிந்து வந்தநிலையில், வியாழன் இரவு, மகள் பிரியாவுடன் கோபால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை கோபால் தனது வீட்டின் முன் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். அருகில் வசிப்பவர்கள் வீட்டினுள் சென்ற பார்த்தபோது, அங்கு கோபாலின் மகள் பிரியா படுகாயத்துடன் இறந்து கிடந்ததும், அவர் அருகில் சிறிய கத்தி மற்றும் சுத்தியல் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எடப்பாடி போலீஸார், இரு உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கோபால் அடிக்கடி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்துகொள்வார் என கூறப்படுகிறது.
தனது மகளை கொலை செய்த கோபால் தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து எடப்பாடி போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் ஆய்வாளர் செந்தில் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். கொலை நடந்த பகுதிக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் : கனிமொழி எம்பி வலியுறுத்தல்
திங்கள் 1, மார்ச் 2021 4:22:17 PM (IST)

நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் மார்ச் 7ல் ஒரே மேடையில் அறிமுகம்: சீமான் அறிக்கை
திங்கள் 1, மார்ச் 2021 4:07:33 PM (IST)

மோடிக்கு அடிபணிந்து இருக்கும் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது: ராகுல்
திங்கள் 1, மார்ச் 2021 3:22:50 PM (IST)

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மூன்றே மாதங்களில் ரூ.225 உயர்வு: வைகோ கண்டனம்
திங்கள் 1, மார்ச் 2021 3:18:06 PM (IST)

பகவதியம்மன் கோயில் திருவிழா: குமரி மாவட்டத்திற்கு 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திங்கள் 1, மார்ச் 2021 12:17:02 PM (IST)

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு - பொதுமக்கள் கடும் பாதிப்பு
திங்கள் 1, மார்ச் 2021 11:58:59 AM (IST)

தமிழன்Feb 21, 2021 - 06:09:30 PM | Posted IP 103.1*****