» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேர்தல் அறிவிப்புக்கு முன் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடையும் : அமைச்சர் ஜெயக்குமார்
திங்கள் 22, பிப்ரவரி 2021 5:12:23 PM (IST)
தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் அதிமுக கூட்டணியில் இருந்த பா.ம.க. மற்றும் தேமுதிக தொடர்ந்து கூட்டணியில் நீடிக்குமா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே கமல் ஹாசன் 3-வது அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் உலாவருகின்றன. நேற்று இதை உறுதி செய்யும் வகையில் 3-வது அணி உருவாக வாய்ப்புள்ளது என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ்- திமுக இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்து வந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ. ஒருவரும் ராஜினாமா செய்தார். தேர்தல் வரை திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பேச்சும் ஒரு சான்றாக உள்ளது. இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் ‘‘தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன், திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் : கனிமொழி எம்பி வலியுறுத்தல்
திங்கள் 1, மார்ச் 2021 4:22:17 PM (IST)

நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் மார்ச் 7ல் ஒரே மேடையில் அறிமுகம்: சீமான் அறிக்கை
திங்கள் 1, மார்ச் 2021 4:07:33 PM (IST)

மோடிக்கு அடிபணிந்து இருக்கும் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது: ராகுல்
திங்கள் 1, மார்ச் 2021 3:22:50 PM (IST)

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மூன்றே மாதங்களில் ரூ.225 உயர்வு: வைகோ கண்டனம்
திங்கள் 1, மார்ச் 2021 3:18:06 PM (IST)

பகவதியம்மன் கோயில் திருவிழா: குமரி மாவட்டத்திற்கு 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திங்கள் 1, மார்ச் 2021 12:17:02 PM (IST)

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு - பொதுமக்கள் கடும் பாதிப்பு
திங்கள் 1, மார்ச் 2021 11:58:59 AM (IST)
