» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டம் அறிமுகம்: பட்ஜெட் உரையில் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு

செவ்வாய் 23, பிப்ரவரி 2021 3:31:06 PM (IST)

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்தில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.அதில், எல்ஐசி மற்றும் யுனைடட் காப்பீடு இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டம் துவக்கப்படுகிறது. இதற்கான செலவுத் தொகையை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். 

தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 55.67 இலட்சம் தகுதியான குடும்பங்களுக்கு, குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும், குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையும், நிரந்தர இயலாமைக்கு 2 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory