» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் காரை அடித்து நொறுக்கிய கும்பல்... போடியில் பரபரப்பு - போலீஸ் குவிப்பு!!
செவ்வாய் 6, ஏப்ரல் 2021 5:26:02 PM (IST)

போடி அருகே தேனி மக்களவை உறுப்பினரின் காரை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போடி சட்டப் பேரவை தொகுதி தேர்தலில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதைத் தொடர்ந்து அவரது மகளான மக்களவை உறுப்பினர் ஓ.ப.ரவீந்திரநாத் வாக்குச்சாவடிகள் ஆய்வு செய்தார். போடி பெருமாள் கவுண்டன்பட்டியில் வாக்குச் சாவடியை ஆய்வு செய்ய ஊருக்குள் நுழைந்த போது திடீரென நாலாபக்கமிருந்தும் கற்களால் சிலர் அவரது காரை தாக்கினர்.
இதில் அவரது காரின் முன்பக்கம், பின் பக்கம், பக்கவாட்டு கண்ணாடிகள் சேதமடைந்தன. சத்தம் கேட்டு அவருடன் பாதுகாப்புக்கு வந்த தொண்டர்கள் இறங்கி வருவதற்குள் கற்களை வீசிய மர்ம நபர்கள் தப்பி விட்டனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து தேனி எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி, போடி டி.எஸ்பி. பார்த்திபன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதனையடுத்து வேறு வாகனத்தில் மக்களவை உறுப்பினர் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!
வியாழன் 15, ஏப்ரல் 2021 5:23:55 PM (IST)

தமிழகத்தில் கரோனா 2-வது அலை கைமீறிச் சென்று விட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
வியாழன் 15, ஏப்ரல் 2021 12:42:53 PM (IST)

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கரோனா தடுப்பூசி: தமிழக அரசு உத்தரவு
வியாழன் 15, ஏப்ரல் 2021 11:47:28 AM (IST)

நாகர்கோவிலில் வசந்த் அன் கோ புதிய கிளை திறப்பு விழா
வியாழன் 15, ஏப்ரல் 2021 10:44:50 AM (IST)

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கரோனா: துரைமுருகன் குணமடைந்து வீடு திரும்பினார்
வியாழன் 15, ஏப்ரல் 2021 9:06:27 AM (IST)

தென்னிந்திய திருச்சபை: திருநெல்வேலி திருமண்டல நிர்வாகிகள் தேர்வு
வியாழன் 15, ஏப்ரல் 2021 8:40:02 AM (IST)
